Site icon TNPSC Academy

Tnpsc Current Affairs in Tamil – Sep. 7, 2016 (07/09/2016)

Gaurilla

Silverback eastern lowland gorilla portrait in the equatorial forest of Kahuzi Biega Park (Gorilla beringei graueri) Democratic Republic of Congo, Africa

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.7, 2016 (07/09/2016)

 

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் IIT -M

QS இன் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னையை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் of டெக்னாலஜி 249 வது இடத்தை பிடித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 254 ஆம் இடத்திலும் 2014 ஆம் ஆண்டு 322 ஆம் இடத்திலும் இருந்து வந்தது.

முதல் 250 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய பல்கலைக்கழகம் IIT -M தான்.

அமெரிக்காவை சேர்ந்த Massachusetts Institute of Technology(MIT) முதல் இடத்தை  பிடித்துள்ளது. மேலும் Harvard பல்கலைக்கழகம் 2 ஆம் இடத்திலும் stanford பல்கலைக்கழகம் 3 ஆம் இடத்திலும் உள்ளன.

QS பற்றி:

Quacquarelli Symonds என்ற உலக கல்வியை ஆராய்ந்து பட்டியலிடும் பிரிட்டிஷ் நிறுவும் இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

INSAT-3DR (இன்சாட் 3 டி ஆர் )

செப்டம்பர் 8 ஆம் தேதி இன்சாட் 3 டி ஆர் இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து விண்ணில் GSLV F 05 என்ற ராக்கெட் மூலம் செலுத்த படுகிறது.

INSAT-3DR (இன்சாட் 3 டி ஆர் )பற்றி:

இச்செயற்கைக்கோள் பருவநிலை மாற்றதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும்.

இச்செயற்கைக்கோள் CE (Cryogenic Engine) 7.5 என்ஜின் மூலம் இயக்கப்படும் முதல்  செயற்கைகோள் ஆகும்.

இந்தியா தவிர அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், சீனா இவ்வகையான என்ஜினை பயன்படுத்துகிறது..

 

தில்லிஉலகில் இரண்டாவது பெரிய நகரம்

பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை 2016 ஆம் ஆண்டிற்கான பெரும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில் டெல்லி உலக நாடுகளில் 2 வது பேரும் நகரம் என இடம் பெற்றுள்ளது.

 

ஸ்ரீலங்காமலேரியா இல்லாத நாடு

உலக சுகாதார நிறுவனம் ஸ்ரீலங்காவிற்கு மலேரியற்ற நாடு என சான்று அளித்துள்ளது.2012 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா மலேரியாவால் பாதிக்கப்பட்ட நாடாகவே இருந்தது.பின்னர் அந்நாடு சுகாதார துறை மலேரியா ஒழிப்பு முகாம்கள் மூலம் பல திட்டங்களை கொண்டு இந்நிலையை அடைந்துள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா யானை கால் நோய் முற்றிலும் தவிர்த்த நாடாகவும் விளக்குகின்றது.

 

அழியும் தருவாயில் உலகின் மிக பெரிய வாலில்லா குரங்கு இனம் (Gorilla beringei graueri)

காங்கோ ஜனநாயக குடியரசு பகுதியை சார்ந்த கிழக்கு கொரில்லா இனம் அழிந்துவரும் இனமாக உள்ளது என IUCN உலக பாதுகாப்பு காங்கிரசில் அறிவித்துள்ளது.

 

தமிழகத்திற்கு ஸ்வதேஷ் தர்சன் திட்டம் :

சுற்றுலா துறை அமைச்சகம் இந்தியாவில், மத்திய பிரதேசம் ,உத்தரகண்ட் ,உத்திர பிரதேசம் ,சிக்கிம் , தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களுக்கு ஸ்வதேஷ் தர்சன் திட்டதின் கீழ் நிவாரணம் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மூல தமிழகத்தின்   கடலோர சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த உள்ளனர்.

சென்னை-மாமல்லபுரம்-ராமநாதபுரம்-மணப்பாடு-கன்னியாகுமாரி ஆகிவை மேம்படுத்தப்படும்.

விவேகாந்தர் பறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் நடைப்பாளம் அமைக்கப்படும்.

 

எரிவாயு முகம்:

இந்திய நாடு முழுவது எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க எரிவாயு முகம் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சகம் மூலம் நடத்தப்படுகிறது. பல்வேறு நிறுவங்கள் கலந்துகொள்ளும் இம்முகாமில் சமூக வலைத்தளங்கலின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைப்பு செயப்பட்டுள்ளது.

 

இந்திய படம் திதி (THITHI)

டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) திரைப்பட விழாவில் கன்னட மொழியை சேர்ந்த திதி படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version